காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு : தஞ்சையில் பாராட்டு விழா

tn.cm JAYAA_தஞ்சையில் 9- ந் தேதி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் விவசாயிகள் சங்கம் சார்பில் பொன்னியின் செல்வி சிலை நினைவு பரிசாக வழங்கப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது 30 கால அரசியல் வரலாற்றில் 22 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

காவிரி நீர் பிரச்சினைக்காக சுப்ரீம் கோர்ட்டு வரை போராடி தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்து வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் விவசாயிகள் சங்கம் சார்பில் வருகிற 9- ந் தேதி பாராட்டு விழா சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். காவிரி நீர் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழாவில் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. காவிரி வெற்றியை கொண்டாடும் வகையில் பாராட்டு விழாவில் 1/2  அடி உயர ‘பொன்னியின் செல்வி’ வெண்கல சிலை, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படுகிறது.

Leave a Reply