இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன் வைக்கும் தீர்மானத்திற்கு : 30 நாடுகள் ஆதரவு!

un-rights-councilPalace_of_Nations_HRCஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு 30 நாடுகள் ஆதரவளித்துள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவினால் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளதாகவும், நேரடியாக 30 நாடுகள் ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் நேரடி ஒத்துழைப்பை வழங்கத் தயார் என அறிவித்துள்ளன. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து  இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு இன்னமும் தெரியவில்லை.

வேறு வழியின்றி இந்தியாவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் என சர்வதேச அளவில் நம்பப்படுகிறது. இதே வேளை, மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடுமாறு இலங்கை உலக நாடுகளிடம் கோரி வருகின்றது.

இது தொடர்பில் ஜெனீவாவில் விசேட தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளை இலங்கைப் பிரதிநிதிகள் ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிகிறது.

Leave a Reply