வழக்கறிஞர்களும், காவிரி தொழில் நுட்பக் குழுவினரும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

pr260213cதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று (26.2.2013)  தலைமைச் செயலகத்தில், காவிரி நதிநீர் வழக்கு தொடர்பாக தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்களும், காவிரி தொழில் நுட்பக் குழுவினரும் சந்தித்தனர்.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தங்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவ்வப்போது வழங்கியதின் காரணமாக தங்களால் சிறப்பாக வாதிட முடிந்தது என்றும், அதன் காரணமாக உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டது என்றும் தெரிவித்து, தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்களும், காவிரி தொழில்நுட்பக் குழுவினரும் தமிழக  முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு தெரிவித்து கொண்டனர்.

 அப்போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி நடுவர்மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு தமிழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், காவிரி தொழில் நுட்பக்குழுவினருக்கும் தனது பாராட்டுதல்களை தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, காவிரி நடுவர்மன்ற இறுதி ஆணையினை செயல்படுத்த தமிழகத்தின் சார்பில் எடுக்கப்படவிண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply