கருநாகத்தின் ரத்தத்தைக் குடித்த பெண்!

snakeஅமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் தாய்லாந்து ராணுவ வீரர்களின் உதவியுடன் ‘கோப்ரா கோல்ட் 13  என்ற சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காடுகளில் அளிக்கப்பட்ட இந்த பயிற்சியின் போது வன விலங்குகள் மற்றும் அதிக நச்சுத் தன்மையுள்ள பாம்புகளை அடித்துக் கொல்வது, பேரிடரில் சிக்கித் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காடுகளில் மறைந்திருந்தபடி பல நாட்கள் உயிர் வாழ்வது எப்படி? என்பன உள்ளிட்ட பல்வேறு போர் பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன. இப்பயிற்சியில், அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13,000 வீரர்கள் பங்கேற்றனர்.

snake.1pngபயிற்சியில் ஒரு கட்டமாக மிக கடுமையான நச்சுத் தன்மையுள்ள கருநாகங்களை வேட்டையாடும் கலை பற்றி கற்றுத் தரப்பட்டது. ஒரு கருநாகத்தின் ரத்தத்தை குடித்து, உணவு ஏதும் கிடைக்காத நிலையில் உயிரை காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தாய்லாந்து காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே கருநாகத்தின் ரத்தத்தை குடிக்கும் வழக்கம் நிலவி வருகிறது.

பாலுணர்வு எழுச்சியை தூண்டுவதில் முதன்மை மருந்தாக கருதப்படும் கருநாகத்தின் ரத்தம் கிழக்கு ஆசியா பகுதியில் உள்ள பல நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், பிடிபட்ட கருநாகத்தின் ரத்தத்தை குடிக்க அமெரிக்க வீரர்கள் பலர் மறுத்தனர். ஆனால் ஒரு பெண் கடற்படை வீரர் மட்டும் துணிச்சலுடன் கருநாகத்தை கொன்று வெட்டப்பட்ட பாம்பின் தலைப் பகுதியை வாய்க்குள் வைத்து ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

Leave a Reply