ஹைதராபாத் குண்டுவெடிப்பு: ஐ.நா., அமெரிக்கா கண்டனம்

bom1

bombomb-blast-in-hyderabadbomb-blast-visualBomb_blast.jpg3jpegBomb_blast.0jpg.jpgfrBomb_blast.0jpg.jpgfib

 

Bomb_blast.0jpg.jpgdBomb_blast.0jpgBomb_blast.jpg2boBomb_blastBomb_blast.th

 

ஹைதராபாதில்  20.02.2013 வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.இதுதொடர்பாக ஐ.நா. செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

bankimoon

bankimoon

ஹைதராபாதில் அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இந்திய அரசு மற்றும் பொதுமக்களுக்கு பான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

   Victoria Nuland

Victoria Nuland

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஹைதராபாதில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புலன் விசாரனையில் இந்தியா கேட்டுக் கொண்டால் உதவ தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

Leave a Reply