மேற்கு ஆப்பிரிக்கா இஸ்லாமிய போராளி முகாம்கள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் !

france jet attackமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் வட மாவட்டங்களை இஸ்லாமிய போராளிகள் கைப்பற்றி தங்களின்   கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். முன்னர், பிரான்ஸ் நாட்டின் ஆளுமைக்கு கீழ் காலனி நாடாக இருந்த மாலியில் ஆதிக்கம் செலுத்தி வரும் இஸ்லாமிய போராளிகளை ஒடுக்கி, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை கைப்பற்ற மாலி அரசுடன் பிரான்ஸ் கைகோர்த்துள்ளது.
islamik terrrபிரான்சின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாலியில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டு குடிமக்களில் சிலரை இஸ்லாமிய போராளிகள் கடத்திச் சென்று கைதிகளாக சிறை வைத்துள்ளனர். பிரான்ஸ் ராணுவ வீரர்கள் 3 ஆயிரத்து 500 பேர் மாலியின் குவிக்கப்பட்டுள்ளனர்.

france presidentகடந்த 02.02.2013 மாலி தலைநகர் பமாகோவிற்கு சென்ற பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே, மாலியின் இழந்த பகுதிகளை விரைவில் மீட்போம் என்று சபதம் செய்தார். இந்நிலையில், இஸ்லாமிய போராளிகளின் ஆதிக்கம் நிறைந்த மாலி நாட்டின் வட பகுதிகளான கிடால், டெசலிட் உள்ளிட்ட 20 இடங்களில் உள்ள பதுங்கு முகாம்களின் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் இன்று குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

mali attack2இந்த தாக்குதலில் பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான சுமார் 30 ஜெட் விமானங்கள் ஈடுபட்டன என பிரான்ஸ் விமானப்படை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார். போராளிகளில் பலர் அல்ஜீரியா எல்லைப் பகுதியான மலைப்பிரதேசங்கள், பாலைவனங்களை  நோக்கி தப்பிச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply