மக்களை முன்னேற்றாமல், இங்கு எதையும் மாற்ற முடியாது ! ஜெய்ப்பூரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேச்சு!

rahul1மக்களை முன்னேற்றாமல், இங்கு எதையும் மாற்ற முடியாது என ஜெய்ப்பூரில் நடக்கும் காங்கிரஸ் கட்சி மாநாட்டில். இன்று (20.01.2013) மாலை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பேசினார்.

எனக்கு ஆதரவு அளித்ததற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். கடந்த 8 வருடங்களில் கட்சி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது.

1947-ம் வருடம் இந்தியா ஆயுதத்தால் விடுதலை பெறவில்லை. அமைதியாகவும், மக்களின் அறப்போராட்டம் மூலமாகவும் விடுதலை பெற்றது. ஆயுதம் ஏந்தாமல், வெள்ளையர்களை நாட்டை விட்டு அனுப்புவோம் என காங்கிரஸ் கூறியது.

மகாத்மா காந்தி வழிவந்தவர்கள், ஜனநாயகம் தான் அரசியல் சட்டத்தின் முக்கியமானது என வலியுறுத்தினர். மதம், ஜாதி பாராமல், இந்தியர்கள் ஒவ்வொருவரும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க உள்ளனர். பசுமைப்புரட்சி விவசாயிகளின் குரலை திருப்பி கொடுத்தது. தகவல் தொழில்நுட்ப புரட்சி மக்களின் குரலை திருப்பி கொடுத்தது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, பல உரிமைகளை வழங்கி ஆயிரகணக்கான மக்களின் உரிமைகளை உறுதி செய்தது. தற்போது முதல் முறையாக மக்கள் தங்கள் உரிமைகளை உறுதி செய்துள்ளனர். ஆயிரகணக்கானவர்கள், கடந்த காலங்களில் இந்திய அரசியல் அமைப்பு தடுமாறுகிறது என கூறுகின்றனர். நமது அமைப்பில் அதிகாரம் என்பது மையமாக உள்ளது. மக்களை முன்னேற்றாமல், இங்கு எதையும் மாற்ற முடியாது.

தற்போது ஊழல் பெரிய பிரச்னையாக உள்ளது. அதை ஒழிப்பது பற்றி பேசுகின்றனர். பெண்களை மதிக்காதவர்கள், பெண்களின் உரிமைகள் பற்றி பேசுகின்றனர். இன்று முதல் ஒவ்வொருவருக்காகவும் பாடுபட போகிறேன். ஆம் ஆத்மியை அரசியலில் கொண்டு வர வேண்டும். இதனை நாம் மூடிய அறைகளுக்குள் இருந்து பேசுகிறோம். இளம் வயதினர் மற்றும் பொறுமையற்றவர்கள் பலர் நீண்ட குரல் கொடுக்கின்றனர். அவர்கள் அமைதியாக கவனிக்க மாட்டார்கள். சிறந்த எதிர்காலத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எனது தந்தை ஏழைகளுக்கு 15 பைசா சென்றடைவது பற்றி பேசுவார். ஆனால் இப்போது அவர்களுக்கு 99 பைசா சென்றடைவதை உறுதி செய்துள்ளோம். ஆனால் எதிர்கட்சியினர், இதனை லஞ்சம் கொடுப்பதாக கூறுவார்கள்.
அதிகார பரவலை டில்லியிலிருந்து பஞ்சாயத்துகளுக்கு கொடுக்க வேண்டும். நான் இளைஞர்களை பார்த்து  பெருமையடைகிறேன். அவர்களுக்கு உலகளவில் பல்வேறு சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைக்க நமது அமைப்புகள் பயிற்சியளிக்க வேண்டும்.

 நீங்கள் எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளீர்கள். காங்கிரஸ் என்பது கட்சியல்ல மிகப்பெரிய குடும்பம். இது தான் உலகில் மிகப்பெரிய குடும்பம். ஒவ்வொரு இந்தியனுக்கும் அறை உள்ளது. இந்த குடும்பத்தில், உங்களின் கருத்துக்களை வைத்து மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த நான் தற்போது துணைத் தலைவராகியுள்ளேன். இன்று முதல் நான் உங்கள் அனைவருக்காக உழைக்க போகிறேன். உங்களின் குரலை கேட்பதுடன். உங்களை சமமாக நடத்துவேன் என்பதை உறுதி கூறுகிறேன். அரசியலில் கடினமாக உழைத்து மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்.

ஆனால் இதை மெதுவாகவும், நீண்ட காலத்திற்கும் செய்ய வேண்டும். காங்கிரஸ் மகாத்மா காந்தியின் அமைப்பு. இந்தியாவின் ஒவ்வொரு அசைவும் கொண்டுள்ளது. இதனை எதிர்கட்சியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ச்சிக்கான தலைவர்களை நாம் முன்னிறுத்த வேண்டும். இன்று முதல் அடுத்த 5 ஆண்டுகளில், நாட்டை ஆளக்கூடிய 40 முதல் 50 தலைவர்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Leave a Reply