வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் பொங்கல் விழா!

16.1.2015 - PFP1

PFP2

Pongal-festivel

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி, பசுமாடுகளுக்கு கோமாதா பூஜை வைத்து வழிபாடு சிறப்பாக இன்று (16.01.2015) நடைபெற்றது.

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் பொங்கல் விழா அரசு இசைப்பள்ளி சார்பில் மங்கள இசையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பசுமாடுகளுக்கு கோமாதா பூஜை செய்யப்பட்டது. அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கரகாட்டாம, ஒயிலாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம், மெல்லிசை குரல் ஆகியவை தூத்துக்குடி பகுதியில் வசித்து வரும் மக்கள் பொங்கல் விடுமுறை நாட்களில் தாங்கள் தங்களின் குடும்பத்தினருடன் பொழுது போக்கினை இனிதாக கழிக்கும் வகையில் பெரியோர், சிறியோர் கண்டு மகிழ்ந்திட தனியார் கலை குழுவினர் சார்பாக ஜிம்னாஸ்டிக், தற்காப்புக்கலை மற்றும் சிலம்பாட்டம், இன்னிசை நிகழ்ச்சி, இசைக்குழு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை 1000க்கு மேற்பட்ட மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அலுவலர் (பொ) சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சி.குமார், தே.ராம்குமார், சக்கம்மாள் தேவி ஆலயக்குழு கமிட்டி தலைவர் முருகபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-பி.கணேசன்@ இசக்கி.