வானிலை மோசமானக் காலங்களில் மீனவர்கள் மாற்றுத் தொழில் செய்வதற்கு வழிவகை செய்யவேண்டும்: செல்லம்மாள் வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுடன் முன்னாள் வானிலை மைய இயக்குநர் ரமணன் கலந்துரையாடல்!

Ramanan speech in Chellammal School trichy 1

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள செல்லம்மாள் வித்யாலயா பள்ளியில் 2018 முதல் 2021 வரை உலக தரம் வாய்ந்த பள்ளி சான்றிதழ் பெறுவதற்கான செயல் திட்டத்தின் ஒருப்பகுதியாக சென்னை முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்கநர் ரமணன் மாணவ, மாணவிகளுடன் வானிலை மாற்றம், திடீர் வெள்ளபெருக்கு, பூமி வெப்ப மயமாதல் உள்ளிட்ட காரணங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் ரமணன் உரையாற்றினார். மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ரமணன்  பதில் அளித்தார்.

Ramanan speech in Chellammal School trichy 2

அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தற்போது மழை பெய்து வருவது குறித்து கேட்டதற்கு, காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்கிறது என்றார்.

ஒக்கி புயலால் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் வானிலை மையம் சரியான தகவலை தராதது தான் என்று கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, நான் அப்போது ஊரில் இல்லை தெலுங்கானாவில் இருந்தேன், என்ன தகவல் கொடுத்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என்றார்.

வானிலை மற்றும் பருவநிலை மாற்றத்தினால் பூமி வெப்பமயமாவதை தடுக்க மாணவர்களுக்கு எந்த முறையில் விழிப்புர்ணவு ஏற்படுத்துவது?

தற்போது அது குறித்துதான் மாணவர்களிடம் எடுத்துரைத்தேன். ஏன் பருவநிலை மாறுகிறது? என்ன உத்திகளை கையால்வது? என்ற விழிப்புணர்வு வேண்டும். வெப்ப மயமாவதற்கு  மீத்தேன், கார்பண்டை ஆக்சைடு ஆகியவற்றை குறைக்க வேண்டும். மேலும், சூரிய ஒளி புதிப்பிக்கத்தக்க எரி சக்தி மற்றும் காற்றாலை பயன்பட்டை அதிகரிக்க வேண்டும். கருவிகளின் செயல்பாடு குறையும். அதனால் கரியமிலா வாயு குறையும். அடுத்து தொழில் நுட்ப மாற்றங்கள் குறைந்த சக்தியை பயன்படுத்தி எல்லாவித பணிகளையும் செய்யமுடியும் என்றால் அது சிறப்பானதாகும்.

மாணவர்கள் இதில் முனைப்புடன் செயல்பட்டு நாட்டை முன்னுக்கு கொண்டு வரவேண்டும். கண்டிப்பாக நாடு முன்னுக்கு வரும். அது மாணவர்களின் கையில்தான் உள்ளது. உலகத்தில் நிறைய நாடுகளில் மக்கள் தொகை குறைந்துள்ளது. நம் நாட்டில் இளைஞர்கள் பட்டாளம் அதிகம். என்ன படிப்பை தேர்வு செய்வது எந்த வழியில் போனால் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இந்த வருட மழை வடகடலோர மட்டும் பயன் அடைந்து திருவள்ளுர், நாகை மாவட்டங்கள் பயனடைந்தது.

ஒக்கி புயல் காரணமாக பெரிய பாதிப்பு ஏற்பட்டது வருத்தமளித்தாலும், இதனால் ஈரோடு, கரூர் போன்ற உள்மாவட்டங்கள் பயனடைந்தது.

மீனவர்களுக்கு பருவநிலை மாற்றம் குறித்து தெரியாதது பற்றி கேட்டதற்கு, மீனவர்கள் செல்போன் 15 கிலோ மீட்டர்தான் வேலை செய்யும். அவர்களுக்கு வானிலை தெரியாது. இதற்காக “நேப்டிக்ஸ்” என்ற கருவி உள்ளது. அது பிரிண்ட் அவுட் மாதிரி வரும் அதனை ஆய்வு செய்து செயல்படுத்த வேண்டும். அது கப்பல்களில் பயன்படுத்தப்படுகிறது. அது தமிழில் வருவது போல் செய்ய வேண்டும். மோசமான வானிலையில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கும், தெளிவான வானிலையில் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தகவல் கிடைக்கும். இல்லை என்றால் சேட்டிலைட் மூலம் இயங்கும் கருவிகள் வைத்து தகவல் கிடைப்பது குறித்து யோசிக்கவேண்டும்.

வானிலை மோசமானக் காலங்களில் மீனவர்கள் மாற்றுத் தொழில் செய்வதற்கு வழிவகை செய்யவேண்டும்.

வெளிநாடுகளில் கடலுக்கு அடியில் 30 நிமிட பயணத்தை வீடியோ எடுத்து தருகிறார்கள். அதற்கு ரூ.1,300 கட்டணம் வசூலிக்கிறார்கள். அதேபோல் இங்கும் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், தமிழ்நாட்டில் அதிக கடல் பரப்பு உள்ளது.

மேரி கல்சர் கடல் பகுதில் பெரிய தொட்டி வைத்து மீன் வளர்கலாம், முத்து குளிப்பான் போன்ற தொழில்களை செய்தால் மீனவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். மாணவர்கள் இதுபோன்ற தொழில் நுட்பத்தை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு முன்னாள் வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செல்லம்மாள் வித்யாலய பள்ளி செயலர் செந்தூர்செல்வன், முதல்வர் உஷா ஆகியோர் செய்திருந்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

 

 

 

 

Leave a Reply