தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.  

s2017022799334 ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தில்லியில் பிரதமர் நரேந்திர மோதியை இன்று (27.02.2017) சந்தித்தார். தமிழகத்தில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

குறிப்பாக, மருத்துவ பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோதியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து பேசினார். மேலும், வறட்சி நிவாரண நிதி, மேகதாது அணை பிரச்னை, பவானியில் தடுப்பணை, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் பேசியுள்ளதாக தெரிகிறது. 

-எஸ்.சதிஸ்சர்மா.