ஜப்பான் தூதர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்

pr050413b தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் டகேஷி யாகி இன்று (05.04.2013)  சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பின்போது, ஜப்பான் தூதருடன் சென்னையில் உள்ள தூதர் மாசானோரி நகானோ மற்றும் டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரக ஆலோசகர் தோஷிஹிரோ யமகோஷி ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் ஜப்பான் முதலீடு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஒரகடம் தொழிற்பேட்டையில் உள்ள நிசான் கார் கம்பெனி, யமஹாவின் இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலை ஆகியவற்றில் ஜப்பான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இதேபோல் ஜப்பானில் உள்ள சர்வதேச கூட்டுறவு நிறுவனம், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply