செவ்வாய்க்கு செயற்கைக்கோள் : வேகமாக வளர்ந்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்

isro

isromarsh-missionrk

இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் விண்வெளி ஆய்வு கழகம் விண்வெளித் துறையில் ஆசிய நாடுகள் ஏதும் செல்லாத தூரத்துக்கு செல்ல முனைந்துள்ளது.

சமூக, பொருளாதார மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளில் நமது இந்தியா வெகுவாகப் பின்தங்கியிருந்தாலும் ஒரு சில துறைகளில் அது வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்தியா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் கனவு திட்டங்களில் நிலவுக்கு மனிதனை அனுப்புவது, செவ்வாய் கிரக ஆராய்ச்சி போன்றைவை அடங்கும். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை தற்போதைக்கு ஒத்திவைத்துள்ள இஸ்ரோ, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

அதன் முதல்படியாக கடந்த 28-ந்தேதி மங்கல்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. ஆனால் மோசமான வானிலை போன்ற காரணங்களால் அந்த திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் நீண்டகால கனவாக இருக்கும் செவ்வாய் கிரக விண்கலம் திட்டம் அடுத்த சில தினங்களில் (05.11.2013) நிறைவேறப்போகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் மங்கல்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

சுமார் 500 கோடி ரூபாய் செலவில் மங்கல்யான் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. சுமார் 13300 கிலோ எடை கொண்ட மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வேதித் தன்மை அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளிட்டவை குறித்து ஆராயும். செவ்வாய்க்குச் சென்று அங்கு மீதேன் வாயு இருக்கின்றதா என்பதை ஆராய்வதே தமது நோக்கம் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் கே. ராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 மீதேன் அங்கு இருந்தால் அங்கு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக கருதப்படும் என்று தெரிகிறது.