குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்காத திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஷ்வரியை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்!

S5080018 S5080009

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வரவில்லை. இதனால், பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள கழிவு நீர் சாக்கடைகளை துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்வதில்லை. இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அதில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்சல்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுக்குறித்து திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஷ்வரியிடம், கிராம மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.

மேலும், நவல்பட்டு ஊராட்சிக்கு பெல் நிறுவனத்தில் இருந்து ஆண்டு தோறும் வரி வருவாய் பெரிய அளவில் வருகிறது. ஆனால், அந்த நிதியில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதனைக்கண்டித்து நவல்பட்டு பொது மக்கள் நவல்பட்டு ஊராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர்.

S5080026

இதுக்குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ராதிகா, வருவாய் ஆய்வாளர் யோகராஜா, திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஷ்வரி ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அதிகாரிகள் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தால் மட்டுமே போராட்டம் விளக்கி கொள்ளப்படும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.

S5080032

இதற்கிடையில் பெல் (BHEL) காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம், துவாக்குடி காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில், நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியல் போராட்டத்தை கைவிடுமாறும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்படகூடாது என்றும், உடனே கலைந்து செல்லவில்லை என்றால், அனைவரையும் கைது செய்வோம் என்றும், போராட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்களை மிரட்டினார்கள்.

S5080055

ஆனால், அதற்கு பொதுமக்கள் அஞ்சாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அங்கு பரப்பரபு ஏற்பட்டது. பின்னர் திருவெறும்பூர் தாசில்தார் ஷோபா சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடனடியாக ஒரு போவெல் புதிதாக அமைக்கப்படும், மேலும், கழிவு நீர் வடிகால் வாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனையடுத்து  மறியல் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் நவல்பட்டு – துப்பாக்கி தொழிற்சாலை சாலையில் 3 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-ஆர்.சிராசுதீன்.