உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தை மிரட்டும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி!

KARUNANIDHIஇந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தை மிரட்டும் வகையில் நேற்று (19.04.2014) தென்சென்னை வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தேர்தல் பொது கூட்டத்தில் விமர்சித்து பேசியிருப்பது நீதிதுறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் 18.04.2014 அன்று நடைபெற்ற மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஏப்ரல் 25-ம் தேதியுடன் தான் ஓய்வுபெற இருப்பதால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கில் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

supremcourt-sadasivam

அதற்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வரும் 24-ம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற உள்ள சூழ்நிலையில் நீதியரசர் சதாசிவம் தான் ஓய்வு பெற உள்ள ஏப்ரல் 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்தில் ஏற்படுத்துமோ? என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றும்,

முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் முன்பு வரும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தும் கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா? என்பதையும் எண்ணிப்பார்த்து அதற்கேற்ப முடிவு செய்வது நீதிமன்ற நெறிகளை காப்பாற்ற பயன்படும் என்பதுடன், அனைவருக்கும் நலன் பயக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டம் படித்த நீதிபதிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். நீதிபதி எனக்கும் நண்பர் தான், தெரிந்தவர் தான். நீதிக்கு மதிப்பளித்து நீதி தராசு எல்லோருக்கும் சமம் என்று நினைத்துப் பார்க்க கூடிய நீதிபதி ஒருவர் இது போன்ற கருத்துகளை பொது விழாவில் கூறலாமா? மக்கள் இதனை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை கண்டு காங்கிரஸ்காரர்கள் தான் கவலை பட வேண்டும். ஆனால், கருணாநிதி எதற்கு கவலைப்படுகிறார்?

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது எள்ளளவும், எள் முனையளவும், எந்த ஒரு முயற்சியும் எடுக்காத முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி.

இப்போது அவர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துவிட்டால் இவரது துரோகம் தமிழக மக்களுக்கு வெளிப்பட்டுவிடும் என்று பயப்படுகிறார். இதனால் நடைபெறவிருக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்படும் என்பதால் உச்சநீதி மன்ற நீதிபதி சதாசிவத்தை தேர்தல் பிரச்சாரப் பொதுகூட்டத்தில் பகிரங்கமாக விமர்சித்திருக்கிறார். இது மாபெரும் நீதிமன்ற அவமதிப்பாகும்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டணை விதிக்கப்பெற்ற பேரறிவாழன், அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தன்னை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டி வேலூர் சிறைச்சாலையிருந்து 24.07.2008-ம் தேதி அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதிக்கு உருக்கமான முறையில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதததை படித்தாலே மு.கருணாநிதியின் கபட நாடகம் தமிழக மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்து விடும். அவற்றின் உண்மை நகல் நமது வாசகர்களின் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளோம்.

CM Letter From Perarivalan 1 CM Letter From Perarivalan 2 CM Letter From Perarivalan 3 CM Letter From Perarivalan 4 CM Letter From Perarivalan 5 CM Letter From Perarivalan 6 CM Letter From Perarivalan 7

-டாக்டர்.துரைபெஞ்சமின்.