இலங்கை கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டிருக்கும் அதிநவீன சீன மருத்துவ கப்பல்!

china medical shipchina medical ship1china medical ship3china medical ship4 china medical ship5 china medical ship6 china medical ship7 china medical ship8

china medical ship2

சீன கடற்படைக்கு சொந்தமான ‘ஆர்க் பீஸ்’ (Ark Peace) என்ற மருந்துவ கப்பல் இன்று (ஆகஸ்ட் 06) காலை இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். 

இலங்கை மேற்கு கடற்படை கட்டளையின் துணை தளபதி கொமடோர் சனத் உத்பல உட்பட பல முக்கிய அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும், இலங்கையில் வசிக்கும் சீனர்களும் தனது நாட்டின் கப்பலை வரவேற்பதற்காக கொழும்பு துறைமுக வளாகத்துக்கு வந்தனர். 

அவசர சூழ்நிலைகளில் விரைவில் நிவாரண வழங்குவதற்காக இக்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.  அதிநவீன உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இக்கப்பல், 178 மீட்டர் நீளம் மற்றும் 24 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. இதில் 381 ஊழியர்கள் இருக்கின்றனர். 

இக்கப்பல் உலகம் முழுவதும் விஜயம் செய்துள்ளது. இதுவரை சுமார் 120,000 பொது மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளது. நவீன ஆபரேஷன் தியேட்டர், தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறப்பு மருத்துவ சேவைகள், குடியிருப்பு சிகிச்சை அலகுகள், சிடி ஸ்கேன் இயந்திரங்கள் (Computerized Tomographymachine) உட்பட அனைத்து மருத்துவ வசதிகளும் இக்கப்பலில் உள்ளது.

இக்கப்பலை பார்வையிட இலங்கை மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இக்கப்பல் இம்மாதம் 09-ம் தேதி வரை கொழும்பு துறைமுகத்த்தில் நிலைக்கொண்டு இருக்கும்.

-என்.வசந்த ராகவன்.