அரசு நிலத்தில் கல்குவாரி : ரூ.28.23 லட்சம் மோசடி!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கல் உடைத்து, குவாரி நடத்தி அரசுக்கு ரூ.28.23 லட்சம்வரை இழப்பு ஏற்படுத்தியவர் மீது போலீஸார் 14.02.2013 வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 58812

58814

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நாச்சியார்கோயில் கிராமத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள வண்டிப்பாதையில் புல எண் 588/12, 588/14 என்ற இடத்தின் 9 கி.மீ. தெற்கே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி, நாச்சியார்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வாசுதேவன் என்பவர் 08.03.2011-ம் தேதிக்கு முன்பு கல் உடைத்து குவாரி நடத்தி அரசுக்கு ரூ.28,23,695 அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.

இதனை நாச்சியார்பட்டி, நடுத்தெருவைச் சேர்ந்த வீரப்பநாயக்கர் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அவருக்கு வாசுதேவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவ்ளவுக் காலம் அந்த ஊர் கிராம தலையாரி, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர்,  வருவாய் ஆய்வாளர்,  வட்டாச்சியர் (கனிமவளம்) இவர்களெல்லாம் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

-ஆ.வேல்முருகன்

 

Leave a Reply