தொகுதி வளர்ச்சி நிதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை, திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் மகேஷ் திறந்து வைத்தார்.

S4430002S4430003S4430008 S4430005

S4430013

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ 11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார்.

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி பக்தவச்சல நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள பள்ளி கட்டிடம் மழை பெய்தால் தண்ணீர் சொட்டுகிறது அதனால் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டுமென, அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் மகேஷிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில், 2016 மற்றும் 2017 ஆம் நிதியண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 11 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கி கொடுத்தார்அதில் கட்டப்பட்ட கட்டிடத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் இன்று திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்!
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRRI), இந்திய பிரதமர்  நரேந்திர மோதி! –படங்கள்.